ஆந்திராவின் ஆட்சி, நிர்வாகத்தின் மையமாகும் விசாகப்பட்டினம் - அமைச்சரவையில் முடிவு


ஆந்திராவின் ஆட்சி, நிர்வாகத்தின் மையமாகும் விசாகப்பட்டினம் - அமைச்சரவையில் முடிவு
x

கோப்புப்படம்

தினத்தந்தி 20 Sep 2023 10:20 AM GMT (Updated: 20 Sep 2023 11:04 AM GMT)

ஆந்திரப் பிரதேசத்தின் ஆட்சி மற்றும் நிர்வாகத்தின் மையமாக விசாகப்பட்டினம் மாற்றப்படும் என்று அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அமராவதி,

ஆந்திரப் பிரதேசம் மாநிலம் அமராவதியில் முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், முதல்-மந்திரி அலுவலகம் மற்றும் அரசு அலுவலகங்கள் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் தசரா விழாக்கள் தொடங்கும் நேரத்தில் விசாகப்பட்டினத்திற்கு மாற்றப்படும் என்றும் விசாகப்பட்டினம் ஆட்சி மற்றும் நிர்வாகத்தின் மையமாக மாற்றப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சரவைக் கூட்டத்தில், முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி, விஜயதசமிக்குள் விசாகப்பட்டினத்தில் இருந்து நிர்வாகத்தைத் தொடங்குவோம் என்றும், விசாகப்பட்டினத்தில் அலுவலகங்களைத் தேர்ந்தெடுக்க ஒரு குழுவை நியமிப்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story