டெல்லியில் அமித்ஷாவுடன் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு


டெல்லியில் அமித்ஷாவுடன் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு
x

டெல்லியில் அமித்ஷாவுடன் ஜெகன்மோகன் ரெட்டி சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

புதுடெல்லி,

ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி டெல்லி சென்றிருந்தார். நேற்று முன்தினம், பிரதமர் மோடியை சந்தித்தார்.

இந்தநிலையில், நேற்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்தார். மாநிலம் சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதித்தார். ஆந்திர மாநிலம், கடன் பெறுவதற்கான உச்சவரம்பை முன்பு இருந்த அளவுக்கு உயர்த்துமாறு கோரிக்கை விடுத்தார்.

மேலும், போலாவரம் நீர்ப்பாசன திட்டத்துக்கான திருத்திய மதிப்பீட்டு தொகையான ரூ.5 ஆயிரத்து 548 கோடியை விடுவிக்குமாறு வலியுறுத்தினார். மேலும், நிலுவையில் உள்ள மற்ற பிரச்சினைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார்.


Next Story