ஆந்திர பிரதேசம்: 4 கொள்ளையர்கள் கைது - ரூ.12.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மீட்பு


ஆந்திர பிரதேசம்: 4 கொள்ளையர்கள் கைது - ரூ.12.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மீட்பு
x

ஆந்திர பிரதேசத்தில் 4 கொள்ளையர்களை கைது செய்த போலீசார், ரூ.12.5 லட்சம் மதிப்புள்ள பொருட்களை மீட்டனர்.

கிருஷ்ணா (ஆந்திர பிரதேசம்),

ஆந்திர பிரதேச மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தின் குடிவாடாவில் உள்ள டீச்சர்ஸ் காலனியில் நடந்த திருட்டு வழக்கில், நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 12.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான திருட்டுப் பொருட்களை மீட்டனர்.

கைது செய்யப்பட்ட நான்கு பேரும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பல்வேறு மாநிலங்களுக்கு இடையே கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் கொள்ளையர்கள் என்று குடிவாடா டிஎஸ்பி சத்யானந்தம் தெரிவித்தார்.

இந்த கொள்ளை சம்பவம் கடந்த டிசம்பர் 10-ம் தேதி நடந்தது. டீச்சர்ஸ் காலனியை சேர்ந்த நல்லன் சக்ரவர்த்தி, தனது குடும்பத்தினருடன் திருமண நிகழ்ச்சிக்காக ஐதராபாத் சென்றிருந்தார். அப்போது கொள்ளையர்கள் அவரது வீட்டில் கொள்ளையடித்தனர்.

மறுநாள் காலையில் கதவு திறந்து கிடப்பதைப் பார்த்த வாட்ச்மேன், வீட்டின் உரிமையாளர் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

இது குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சுமார் 150 சிசிடிவிகளில் இருந்த காட்சிகளை ஸ்கேன் செய்து, ஆந்திர பிரதேசம்-மராட்டிய எல்லையில் கொள்ளையர்களைக் கண்டுபிடித்து கைது செய்தனர்.


Next Story