முதலிரவு அறைக்குள் சுருண்டு விழுந்து பலியான சாப்ட்வேர் என்ஜினியர்
ஆந்திர மாநிலம், அன்னமையா மாவட்டத்தில் திருமணமான அன்று முதலிரவு அறைக்குள் புதுமாப்பிள்ளை மாரடைப்பால் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
ஐதராபாத்
ஆந்திர மாநிலம் பாகால மண்டலம் பட்டிப்பாடி வாரிப்பள்ளியை சேர்ந்தவர் துளசி பிரசாத். ஐதராபாத்தில் சாப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வந்த இவர், ஐதராபாத்தில் சாப்ட்வேர் என்ஜினியராக இருக்கும் சிரிஷாவை காதலித்து வந்தார. இவர்கள் கடந்த 13-ம் தேதி பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
முதலிரவு அறைக்குள் சென்ற மணமகன் சற்று நேரத்திலேயே மயங்கி விழுந்ததை அடுத்து, குடும்பத்தார் அவரை மருத்துமனைக்கு கொண்டு சென்றனர்.அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
Related Tags :
Next Story