அங்கன்வாடி மையம் உதவிகளை கர்ப்பிணிகள் பயன்படுத்தி கொள்ளவேண்டும்; அப்பச்சு ரஞ்சன் எம்.எல்.ஏ. பேட்டி


அங்கன்வாடி மையம் உதவிகளை கர்ப்பிணிகள் பயன்படுத்தி கொள்ளவேண்டும்; அப்பச்சு ரஞ்சன் எம்.எல்.ஏ. பேட்டி
x
தினத்தந்தி 19 Sept 2022 12:15 AM IST (Updated: 19 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

அங்கன்வாடி மையம் உதவிகளை கர்ப்பிணிகள் பயன்படுத்தி கொள்ளவேண்டும் என அப்பச்சு ரஞ்சன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

குடகு;


கர்நாடக அரசு சார்பில் மாநிலம் முழுவதும் சிசுபாலன கேந்திரா எனப்படும் அங்கன்வாடி மையம் திறக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று குடகு மாவட்டம் மடிகேரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தை தொகுதி எம்.எல்.ஏ. அப்பச்சு ரஞ்சன் திறந்து வைத்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:- மாநில அரசு பொதுமக்களின் சேவைகளுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது புதிதாக அங்கன்வாடி மையங்கள் திறந்து வைக்கப்படுகிறது. இதில் குழந்தைகளுக்கு மட்டுமின்றி கர்ப்பிணி பெண்களுக்கும் ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை கர்ப்பிணி பெண்கள் பயன்படுத்தி கொள்ளவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story