பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்-க்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பெங்களூரு,
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரி சென்றபோது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து, தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அமைச்சர் அன்பில்மகேஷ் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை எடுத்துக்கொண்டார்.
காரிமங்கலம் தனியார் மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இந்த நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷுக்கு ஆஞ்சியோகிராம் மேற்கொள்ளப்பட உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் தற்போது நலமுடன் இருப்பதாக தெரிவித்த மருத்துவர்கள், 24 மணி நேரம் அவர்தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருக்கவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.