அண்ணாமலை நடைபயணம்: மத்திய மந்திரி அமித்ஷா தமிழில் டுவிட்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் நடைபயணம் மேற்கொள்கிறார்.
புதுடெல்லி,
"என் மண் என் மக்கள்" என்ற பெயரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் நடைபயணம் மேற்கொள்கிறார். ராமேஸ்வரத்தில் தொடங்கும் இந்த நடைபயணத்தை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று மாலை தொடங்கிவைக்கிறார்.
இந்த நிலையில், நடைபயணம் தொடர்பாக அமித்ஷா தனது டுவிட்டரில் கூறி இருப்பதாவது;
"தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் செல்கிறேன். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் முன்வைத்த மாற்றத்தினை மாநிலத்தின் ஒவ்வொரு தொகுதிக்கும் எடுத்துச் செல்லும் வகையில், தமிழக பாஜக நடத்தும் "என் மண் என் மக்கள்" பாதயாத்திரையை இன்று கொடியசைத்து தொடங்கி வைக்கிறேன்." என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related Tags :
Next Story