திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா: நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா: நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்
x

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.

திருமலை,

கொரோனா தொற்று பரவலால் 2 ஆண்டுகளாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா வாகன சேவை நான்கு மாட வீதிகளில் நடத்தவில்லை. கோவில் உள்ளேயே பக்தர்களுக்கு அனுமதியின்றி வாகன சேவை நடத்தப்பட்டது. இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழாவையொட்டி 4 மாடவீதிகளில் வாகன சேவை நடக்கிறது.

நாளை (செவ்வாய்க்கிழமை) வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடிேயற்றம் நடக்கிறது. முன்னதாக இன்று (திங்கட்கிழமை) மாலை அங்குரார்ப்பணம் நடக்கிறது.

முதல் நாளான நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 5.45 மணியில் இருந்து மாலை 6.15 மணிவரை மீன லக்னத்தில் பிரம்மோற்சவ விழா கருட கொடிேயற்றம் நடக்கிறது.

பிரம்ேமாற்சவ விழா நிறைவு நாளான 5-ந்தேதி அதிகாலை 3 மணியில் இருந்து காலை 6 மணிவரை பல்லக்கு வாகன வீதிஉலா, காலை 6 மணியில் இருந்து காலை 9 மணிவரை தெப்பக்குளத்தில் சக்கர ஸ்நானம் எனப்படும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடக்கிறது. இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணிவரை கொடியிறக்கம் நடக்கிறது. இத்துடன் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.


Next Story