கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு?


கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு?
x

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்தவருக்கு குரங்கு அம்மை நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளா, கடந்த 12-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா மாநிலம், திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வந்த 35 வயது நபருக்கு குரங்கம்மை காய்ச்சல் இருப்பது கண்டறிபட்டது. இதனையடுத்து அவர் திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையடுத்து, கேரளாவில் உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம் திட்டா, ஆலப்புழா மற்றும் கோட்டயம் ஆகிய 5 மாவட்டங்களுக்கு சிறப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் குரங்கு அம்மை நோய் உறுதியாகி உள்ள நிலையில் அம்மாநில அரசுக்கு உதவும் வகையில் மத்திய சுகாதாரத்துறை குழு ஒன்றை அனுப்பி வைத்தது. இந்த குழுவினர் அங்குள்ள மருத்துவ கல்லூரியில் ஆய்வு நடத்தினர். மேலும், கேரளாவில் நிலைமையை கண்காணித்து வருவதாகவும், விரைவில் கொல்லம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆய்வுக்கு செல்ல இருப்பதாகவும் மத்திய குழுவினர் தெரிவித்தனர்.

இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து, மங்களுர் விமானநிலையம் வழியாக கண்ணூர் திரும்பிய இளைஞர் ஒருவருக்கு குரங்கு அம்மை அறிகுறி ஏற்பட்டுள்ளது. சம்பந்தபட்ட நபருக்கு சுகாதரத்துறையினர் பரிசோதனை செய்தனர். அவரது ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், அவரை தனிமைப்படுத்தி உடல்நிலையை கண்காணித்து வருவதாகவும் சுகாதார அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.


Next Story