கோலார் மாவட்டத்தில் மீண்டும் அறிவிக்கப்படாத மின்வெட்டு


கோலார் மாவட்டத்தில் மீண்டும் அறிவிக்கப்படாத மின்வெட்டு
x
தினத்தந்தி 15 Sep 2023 6:45 PM GMT (Updated: 15 Sep 2023 6:46 PM GMT)

கோலார் மாவட்டத்தில் மீண்டும் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுவதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

கோலார் தங்கவயல்

கோலார் மாவட்டம் முழுவதும் கடந்த 15 நாட்களுக்கு முன் அறிவிக்கப்படாத மின்தடை அமலில் இருந்தது. இதனால் வியாபாரிகளும், பொதுமக்களும் கடும் அவதிக்கு ஆளாயினர்.

இதுபற்றி அறிந்த தொகுதி எம்.எல்.ஏ. ரூபா கலா சசிதர் உள்பட பல்வேறு தொகுதிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் கோலார் மாவட்ட பெஸ்காம் அதிகாரிகளை நேரில் சந்தித்து மின்தடை ஏற்படுவதால் மக்கள், வியாபாரிகள், விவசாயிகள் பாதிக்கப்படுவதை எடுத்துக்கூறினர்.

இனி இதுபோன்று மின் தடை ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கும்படி எச்சரிக்கை விடுத்தனர். அதன்படி கடந்த ஒரு வாரமாக தடையில்லா மின்சாரம் வினியோகிக்கப்பட்டது. ஆனால் நேற்று காலை முதல் மாலை வரை மீண்டும் அறிவிக்கப்படாத மின் தடை அமல்படுத்தப்பட்டது.

இதன்காரணமாக மாவட்டத்தில் பல பகுதிகளில் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் என அனைத்தும் முடங்கின. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதுமட்டுமின்றி இரவு நேரத்தில் மின் தடை செய்யப்படுவதால் மாணவர்கள் படிக்க முடியாமல் அவதிப்பட்டனர்.

கைக்குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். இனியாவது மின் தடை ஏற்படாமல் இருக்க கோலார் தங்கவயல் எம்.எல்.ஏ. ரூபா கலா சசிதர் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து எம்.எல்.ஏ.க்களும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story