கணவருடன் தகராறு...3 குழந்தைகளுடன் மனைவி எடுத்த விபரீத முடிவு


கணவருடன் தகராறு...3 குழந்தைகளுடன் மனைவி எடுத்த விபரீத முடிவு
x

கணவருடன் ஏற்பட்ட தகராறால் மனைவி எடுத்த விபரீத முடிவு அப்பகுதி மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமராவதி,

ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள கலிவீடு கிராமத்தை சேர்ந்தவர் விக்ரம். இவரது மனைவி நாகமணி (வயது 30). இந்த தம்பதிக்கு நவ்யஸ்ரீ, தினேஷ், மற்றும் ஜாஹ்னவி ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர். நாகமணிக்கும் அவரது கணவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், நேற்று இரவு ஏதோ பண விஷயம் காரணமாக நாகமணிக்கும் அவரது கணவர் விக்ரமுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த நாகமணி தனது 3 குழந்தைகளுடன் அப்பகுதியில் உள்ள கந்திமடுகு பாசன குளத்திற்கு சென்றுள்ளார். அங்கு தனது 3 குழந்தைகளையும் தள்ளிவிட்டு பின்னர் இவரும் குளத்தில் குதித்துள்ளார். இதில் நீரில் மூழ்கி 4 பேரும் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்த போலீசார் நாகமணியின் கணவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.


Next Story