சித்ரதுர்கா முருக மடத்தின் பொறுப்பு மடாதிபதியாக பசவபிரபுஸ்ரீ நியமனம்


சித்ரதுர்கா முருக மடத்தின் பொறுப்பு மடாதிபதியாக பசவபிரபுஸ்ரீ நியமனம்
x

சித்ரதுர்கா முருக மடத்தின் பொறுப்பு மடாதிபதியாக பசவபிரபுஸ்ரீ நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சித்ரதுர்கா:

சித்ரதுர்காவில் முருக மடம் உள்ளது. இந்த மடத்தின் மடாதிபதியாக சிவமூர்த்தி முருகா சரணரு இருந்து வந்தார். இந்த நிலையில் மடத்திற்கு சொந்தமான பள்ளியின் விடுதியில் தங்கி படித்த மாணவிகள் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு மீது பாலியல் புகார் கொடுத்தனர். அந்த புகாரின்பேரில் சித்ரதுர்கா போலீசார் மடாதிபதி சிவமூர்த்தி சரணரு மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் மடாதிபதி முருகா சரணரு சிறையில் இருப்பதால், மடத்தில் அன்றாடம் நடக்கும் பூஜைகள், அன்னதானம் உள்ளிட்ட பிற நிகழ்வுகளுக்கு தடை ஏற்பட்டது.

இந்த நிலையில் முருக மடத்தின் பொறுப்பு மடாதிபதியாக பசவபிரபு ஸ்ரீயை நியமிக்கும்படி முருகா சரணரு மடத்தின் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு இருந்தார். மேலும் பசவபிரபு ஸ்ரீயை முருகா மடத்தின் பொறுப்பு மடாதிபதியாக நியமனம் செய்ய கர்நாடக ஐகோர்ட்டும் அனுமதி வழங்கியது. இதையடுத்து முருக மடத்தின் பொறுப்பு மடாதிபதியாக பசவபிரபு ஸ்ரீ நேற்று நியமனம் செய்யப்பட்டார். பொறுப்பு மடாதிபதியான நியமிக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே முருக மடத்திற்கு சென்ற மடாதிபதி பசவபிரபு ஸ்ரீ, முருகா மடத்தில் அன்றாடம் நடைபெறும் பூஜைகளை நடத்தினார். மேலும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கினார்.


Next Story