மல்லிகார்ஜுன கார்கேவுக்கு இன்று பாராட்டு விழா


மல்லிகார்ஜுன கார்கேவுக்கு இன்று பாராட்டு விழா
x

காங்கிரஸ் தேசிய தலைவரான பின்பு பெங்களூரு வரும் மல்லிகார்ஜுன கார்கேவிற்கு இன்று பாராட்டுவிழா நடத்தப்படுகிறது.

பெங்களூரு-

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் கர்நாடகத்தை சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றிருந்தார். தேசிய தலைவரான பின்பு மல்லிகார்ஜுன கார்கே இன்று (ஞாயிற்றுக்கிழமை) பெங்களூருவுக்கு வருகை தர உள்ளார். இதனால் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கர்நாடக காங்கிரஸ் கட்சி சார்பில் உற்சாக வரவேற்பு மற்றும் பாராட்டு விழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு அரண்மனை மைதானத்தில் இன்று மதியம் அவருக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது.

இதில், மாநில தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொள்ள உள்ளனர். அதே நேரத்தில் டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் வருகை தரும் மல்லிகார்ஜுன கார்கேவை, விமான நிலையத்தில் இருந்து குயின்ஸ் ரோட்டில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு ஊர்வலமாக அழைத்து வந்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட இருக்கிறது.


Next Story