ஞானவாபி மசூதியில் 2 ஆவது நாளாக தொல்லியல் துறையினர் ஆய்வு


ஞானவாபி மசூதியில் 2 ஆவது நாளாக தொல்லியல் துறையினர் ஆய்வு
x
தினத்தந்தி 5 Aug 2023 12:42 PM IST (Updated: 5 Aug 2023 5:10 PM IST)
t-max-icont-min-icon

தொல்லியல் துறை ஆய்வு நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்ததையடுத்து 2-வது நாளாக ஞானவாபி மசூதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

வாரணாசி,

ஞானவாபி மசூதியில் அறிவியல்பூர்வமாக ஆய்வு மேற்கொள்ள, அலகாபாத் ஐகோர்ட்டு நேற்று அனுமதி அளித்தது. அதனைத்தொடர்ந்து ஐந்து மணி நேரம் ஆய்வு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்றும் 2-வது நாளாக ஆய்வு செய்ய தொல்லியல் துறை அதிகாரிகள் ஞானவாபி மசூதிக்கு காலை 8 மணி மணிக்கு வந்தனர். அவர்கள் 9 மணிக்கு ஆய்வை தொடங்கினர். தொல்லியல் துறையை சேர்ந்த 40 பேர் கொண்ட அதிகாரிகள் ஞானவாபி மசூதியில் 2 ஆவது நாளாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மதியம் வரை தொடர்ந்து ஆய்வு நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து ஆய்வு நடத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுதாக்கல் செய்த மனுதாரர்களின் வழக்கறிஞர் கூறும்போது,

''தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்துவதற்காக ஞானவாபி மசூதிக்கு வந்துள்ளனர். 9 மணிக்கு ஆய்வு தொடங்கியது. இது 2-வது நாள் ஆய்வு. இந்த ஆய்வு முடியும் வரை மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். நாங்கள் முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறோம். அதிகாரிகள் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி வந்துள்ளனர். அவர்களை நாங்கள் வரவேற்கிறோம். விரைவில இந்த விவகாரத்தை தீர்க்க விரும்புகிறோம். எல்லாவற்றையும் இந்த ஆய்வு தெளிவுபடுத்தும்'' என்றார்.

1 More update

Next Story