ஜன்னல் திறந்திருப்பதில் தகராறு: தலைமை ஆசிரியரை அடித்து உதைத்த ஆசிரியைகள்
இரண்டு ஆசிரியைகளும் கம்பு மற்றும் காலணியால் தலைமை ஆசிரியையை அடித்தனர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பாட்னா
பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள கோரியா பஞ்சாயத்து பள்ளுக்கூடம் ஒன்றில் அனிதா குமாரி ஆசிரியையாக பணியாற்றி வந்தார். வகுப்பறையில் அவர் பாடம் எடுத்து கொண்டு இருந்தார்.அப்போது அங்கு வந்த தலைமை ஆசிரியை காந்திகுமாரி வகுப்பறை ஜன்னலை மூடுமாறு கூறி உள்ளார். இதில் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளது. பின்னர் அது அடிதடியில் முடிந்து உள்ளது.
முதலில் வகுப்பறையில் தொடங்கிய அடிதடி, பள்ளிக்கு வெளியே உள்ள மைதானத்தை அடைந்தது. தலைமை ஆசிரியை காந்திகுமாரியை அனிதா குமாரியும் மேலும் ஒரு ஆசிரிஅயையும் தாக்கி உள்ளனர்.
இரண்டு ஆசிரியைகளும் கம்பு மற்றும் காலணியால் தலைமை ஆசிரியையை அடித்தனர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இது குறித்து வட்டார கல்வி அலுவலர் சரேஷ் கூறியதாவது:- இரு ஆசிரியைகளுக்கும் இடையே தனிப்பட்ட முன்விரோதம் இருந்ததால், தாக்குதல் நடந்துள்ளது. சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.