2 நாள் சுற்றுப்பயணம்: பூடான் சென்றார் இந்திய ராணுவ தளபதி


2 நாள் சுற்றுப்பயணம்:  பூடான் சென்றார் இந்திய ராணுவ தளபதி
x

இந்தியாவின் ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே 2 நாள் பயணமாக பூடான் புறப்பட்டார்.

புதுடெல்லி,

இந்தியாவின் ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே 2 நாள் பயணமாக பூடான் புறப்பட்டார். ராணுவ தளபதியின் இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு சம்பந்தமான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் விதமாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ராணுவம் தரப்பு மேலும் கூறுகையில் , " ராணுவ தளபதியின் இந்த பயணம் இரு நாடுகளுக்கும் இடையேயான நம்பிக்கை, நல்லுறவு மற்றும் இரு நாடுகளுக்கும் இடையேயான புரிதலை அதிகப்படுத்தும். ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே பூடான் மன்னரை சந்திக்கவுள்ளார். இந்தப் பயணத்தின்போது பூடான் நாட்டின் ராணுவ தளபதியுடன் பாதுகாப்பு விஷயங்கள் குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொள்ளவும் உள்ளார்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story