அருணாசல பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: 4 பேர் உயிரிழப்பு
விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டரில் 5 பேர் பயணம் செய்ததாக முதல் கட்ட தகவல் வெளியானது. இதில் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
இடாநகர்,
அருணாச்சலபிரதேச மாநிலம் மேற்கு சியங் மாவட்டம் டியூட்டின் என்ற பகுதியில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் இன்று காலை வழக்கமான ரோந்து பணியில் மேற்கொண்டிருந்தது. காலை 10.45 மணியளவில் மலைப்பாங்கான பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் திடீரென மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஹெலிகாப்டர் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் விபத்து நடத்த பகுதிக்கு விரைந்துள்ளனர். விபத்து நடத்த மலைப்பகுதிக்கு பகுதிக்கு செல்ல சாலை வசதி இல்லாததால் ஹெலிகாப்டர் மூலமும் வனப்பகுதி வழியாகவும் மீட்புக்குழுவினர் விரைந்தனர். அருகில் உள்ள கிராம மக்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டரில் 5 பேர் பயணம் செய்ததாக முதல் கட்ட தகவல் வெளியானது. இதில் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
அருணாசல பிரதேசத்தின் மேல் சையங் மாவட்டத்தில் ராணுவத்தின் மேம்பட்ட லைட் ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானதாக கிடைத்த செய்தி வருத்தம் அளிக்கிறது. இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் என்று மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.