தேசிய சின்னத்தை திறந்து வைத்து பிரதமர் மோடி அரசியலமைப்பு விதிமுறைகளை மீறியுள்ளார் - ஓவைசி குற்றச்சாட்டு


தேசிய சின்னத்தை திறந்து வைத்து பிரதமர் மோடி அரசியலமைப்பு விதிமுறைகளை மீறியுள்ளார் - ஓவைசி குற்றச்சாட்டு
x

Image Courtesy : AFP 

வெண்கலத்தில் உருவான தேசிய சின்னத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.

புதுடெல்லி,

புதிய நாடாளுமன்ற கட்டிடம், மத்திய விஸ்டா மறுஅபிவிருத்தி திட்டத்தின்கீழ் டாடா நிறுவனம் சார்பில் கட்டப்பட்டு வருகிறது. இந்த புதிய கட்டிடம், 64 ஆயிரத்து 500 சதுரமீட்டர் பரப்பில் ரூ.971 கோடி செலவில் நில அதிர்வு ஏற்பட்டாலும், அதனை தாங்கும் வகையில் அதிநவீன வசதியுடன் அமைகிறது.

இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் மேற்கூரையில் இன்று காலை 6.5 மீட்டர் உயரமுள்ள வெண்கலத்தில் உருவான தேசிய சின்னத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். தேசிய சின்னத்தை திறந்து வைத்ததற்கு பிரதமர் மோடி மீது அனைத்து இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லிமின் (எஐஎம்ஐஎம்) கட்சி தலைவரும், ஐதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், " நாடாளுமன்றம், அரசு மற்றும் நீதித்துறையின் அதிகாரங்கள் அரசியலமைப்பில் தனித்தனியாக சித்தரிக்கப்பட்டுள்ளன. அரசுத் தலைவர் என்ற முறையில் பிரதமர் மோடி புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் தேசிய சின்னத்தை வெளியிட்டிருக்கக் கூடாது.


இது லோக்சபா சபாநாயகரின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது. பிரதமர் அனைத்து அரசியலமைப்பு விதிமுறைகளையும் மீறியுள்ளார்."

இவ்வாறு ஓவைசி பதிவிட்டுள்ளார்.


Next Story