அசாம்; 1420 கிலோ எடை அளவிலான கஞ்சா பறிமுதல்..! போலீசார் அதிரடி..!!
1420 கிலோ எடை அளவிலான கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
திஸ்புர்,
அசாம் மாநிலத்தில் டேங்கர் லாரியில் பெருமளவில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் சோதனைச் சாவடிகளில் சோதனையை தீவிரபடுத்தினர்.
இந்நிலையில் கரீம்கஞ்ச் மாவட்டத்தின் சுரைபாரி சோதனை சாவடிக்கு சந்தேகபடும்படியாக பக்கத்து மாநிலத்தில் இருந்து டேங்கர் லாரி வந்தது. அதனை மறித்து போலீசார் சோதனை செய்தனர். அதில் போதைப்பொருள் கடத்தப்படுவது கண்டுபிடிக்கபட்டது. இதனையடுத்து லாரியை ஓட்டி வந்த நபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் கடத்தல் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. லாரியில் இருந்து 71 பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு இருந்த 1420 கிலோ எடை அளவிலான கஞ்சா போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
இந்த சோதனையை வெற்றிகரமாக செய்த காவல் துறையினருக்கு அசாம் முதல்-மந்திரி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.