பாஜக தலைவி படுகொலை; தேசிய நெடுஞ்சாலையோரம் கிடந்த உடல் - அதிர்ச்சி சம்பவம்


பாஜக தலைவி படுகொலை; தேசிய நெடுஞ்சாலையோரம் கிடந்த உடல் - அதிர்ச்சி சம்பவம்
x

படுகொலை செய்யப்பட்ட பாஜக தலைவி உடல் தேசிய நெடுஞ்சாலையோரம் கண்டெடுக்கப்பட்டது.

கவுகாத்தி,

அசாம் மாநிலம் கோபால்புரா மாவட்டத்தை சேர்ந்தவர் ஜோலினி நாத். அவர் அம்மாவட்ட பாஜக செயலாளர் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், கோபால்புரா மாவட்டம் சல்பரா பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஜோலினி நாத் இன்று பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.

நெடுஞ்சாலையோரம் பெண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் உயிரிழந்த பென் பாஜக தலைவி ஜோலினி நாத் என்பது தெரியவந்தது. ஜோலினி நாத் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஜோலினி நாத்தை படுகொலை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அசாமில் பாஜக தலைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story