அசாம்: பிரம்மபுத்திரா ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து - 7 பேர் மாயம்
அசாமில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 7 பேர் மாயமாகி உள்ளனர்.
கவுகாத்தி,
அசாம் மாநிலம் துப்ரி மாவட்டத்தில் உள்ள பிரம்மபுத்திரா ஆற்றில் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் பள்ளி மாணவர்கள், துப்ரி வட்ட அதிகாரி உள்ளிட்ட சுமார் 30 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், துப்ரியில் இருந்து 3 கிமீ தொலைவில் உள்ள அடபாரி என்ற இடத்தில் படகு சென்றுகொண்டிருந்த போது, அங்கிருந்த பாலத்தின் மீது மோதி படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சுமார் 7 பேர் மாயமாகி உள்ளனர்.விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் மாயமானவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மீட்புக்குழுவினர் இதுவரை 15 பேரை காப்பாற்றியுள்ளனர். தொடர்ந்து தேடுதல் பணி நடந்து வருகிறது.
Related Tags :
Next Story