அந்தரங்க பகுதியில் மிளகாய்பொடி தூவியும், மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துவிடுவேன் என கைதிகளை மிரட்டிய போலீஸ்


அந்தரங்க பகுதியில் மிளகாய்பொடி தூவியும், மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துவிடுவேன் என கைதிகளை மிரட்டிய போலீஸ்
x

கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட போது தங்களை துன்புறுத்திய போலீஸ் இவர் தான் என்று மாஜிஸ்திரேட்டிடம் கைதிகள் நேரடியாக கூறினர்.

கவுகாத்தி,

அசாம் மாநிலம் கரிம்கஞ்ச் மாவட்டம் நீலம்பசார் பகுதியில் கொள்ளை வழக்கில் கடந்த புதன்கிழமை இரவு 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 2 பேரும் தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட் முன் கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, கைது செய்யப்பட்ட நபரின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், போலீஸ் காவலில் இருந்தபோது கைதிகளில் ஒருவர் போலீசாரால் மிகுந்த சித்தரவதை செய்யப்பட்டதாக தெரிவித்தார். ஒரு போலீஸ் கைதியின் அந்தரங்க பகுதியில் மிளகாய் பொடியை தூவி துன்புறுத்தியும், உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரிந்த்துவிடுவேன் என மிரட்டியுள்ளதாக வழக்கறிஞர் தெரிவித்தார்.

அப்போது, குறுக்கிட்ட மாஜிஸ்திரேட் சித்தரவதை செய்த போலீஸ்காரர் இப்போது கோர்ட்டு வளாகத்தில் உள்ளாரா? என்று கேட்டுள்ளார். இதனை தொடர்ந்து சித்தரவதைக்கு உள்ளான ஒரு கைதி தன்னை துன்புறுத்திய போலீஸ்காரர் இவர் தான் என்று அங்கு நின்றுகொண்டிருந்த ஒரு போலீஸ்காரரை நோக்கி கை காட்டினர்.

இதனை தொடர்ந்து குற்றஞ்சாட்டப்பட்ட அந்த போலீஸ்காரரை அழைத்த மாஜிஸ்திரேட், விசாரணையின் போது கைதிகளை சித்தரவதை செய்தீர்களா? என கேள்வி எழுப்பினார். அதற்கு கைதிகளை சித்தரவதை செய்ததை அந்த போலீஸ்காரர் ஒப்புக்கொண்டார்.

விசாரணையின் போது கைதிகளை சித்தரவதை படுத்திய போலீஸ்கார் மீது வழக்குப்பதிவு செய்ய மாஜிஸ்திரேட் அதிரடி உத்தரவிட்டார். பின்னர், திருட்டு வழக்கில் கைதாகி போலீஸ் காவலில் சித்தரவதை செய்யப்பட்ட 2 பேரையும் நீதிமன்ற காவலில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.


Next Story