ஒரு லட்சம் சிறு வழக்குகள் ரத்து: சுதந்திர தினவிழாவில் அசாம் முதல்-மந்திரி அறிவிப்பு


ஒரு லட்சம் சிறு வழக்குகள் ரத்து: சுதந்திர தினவிழாவில் அசாம் முதல்-மந்திரி அறிவிப்பு
x

கோப்புப்படம்

ஒரு லட்சம் சிறு வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக சுதந்திர தினவிழாவில் அசாம் முதல்-மந்திரி அறிவிப்பு வெளியிட்டார்.

கவுகாத்தி,

அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் சுதந்திர தினத்தையொட்டி முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா நேற்று தேசிய கொடியை ஏற்றினார்.

பின்னர் அவர் ஆற்றிய உரையில், 'மாநிலத்தில் கீழ் நீதிமன்றங்களில் சுமார் 4 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்டு 14-ந்தேதி நள்ளிரவுக்கு முன் பதிவான சிறு வழக்குகளை ரத்துசெய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் சுமார் ஒரு லட்சம் சிறு வழக்குகள் ரத்தாகும். அதில், சமூக வலைதளப்பதிவுகளுக்காக தொடரப்பட்ட வழக்குகளும் அடங்கும்.

அரசின் இந்த முடிவால், நீதித்துறையின் பளு குறையும். அத்துறையால், கற்பழிப்பு, கொலை போன்ற மோசமான குற்ற வழக்குகளில் கவனம் செலுத்த முடியும்.

அசாம், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி ஆகும். இன்னும் இந்த மாநிலத்தை பிரித்து தனிநாடாக்க விரும்புவோர், பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும்' என்று கூறினார்.


Next Story