மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரிப்பு
தலைநகர் மும்பையில் 739- பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு கிடு கிடுவென உயர்ந்துள்ளது. கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு தொற்று பாதிப்பு உயர்ந்து அதிரவைத்துள்ளது. அம்மாநில அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, தினசரி கொரோனா பாதிப்பு இன்று 1,081- ஆக உயர்ந்துள்ளது.
கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதிக்குப் பிறகு ஒருநாள் கொரோனா பாதிப்பு இந்த அளவுக்கு உயர்ந்தது இதுவே முதல் முறையாகும். கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி 1,124- பேருக்கு ஒருநாள் பாதிப்பு பதிவாகி இருந்தது. அதன்பிறகு தொற்று பாதிப்பு தொடர்ச்சியாக குறைந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது.
தலைநகர் மும்பையில் 739- பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 1,124-ஆக உள்ளது.
Related Tags :
Next Story