குளிர் பிரதேசமான இமாச்சலில் அதிகரிக்கும் வெப்பநிலை: 13 ஆண்டுகளில் இல்லாத வெப்பம் பதிவு


குளிர் பிரதேசமான இமாச்சலில் அதிகரிக்கும் வெப்பநிலை: 13 ஆண்டுகளில் இல்லாத வெப்பம் பதிவு
x

தர்மசாலாவில் கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவில் வெப்பம் அதிகரித்து கானப்படுகிறது.

சிம்லா,

குளிர்ந்த சீதோஷ்ணநிலையால் சுற்றுலாப் பயணிகளுக்கு விருப்பமான மலைப்பகுதியான தர்மசாலாவில் தொடர்ந்து மூன்று நாட்களாக 37 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவாகி வருகிறது.

அங்கு நேற்றைய வெப்பநிலை 37.5 டிகிரி செல்சியசாக பதிவாகி உள்ளது. இது அங்கு கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமான வெப்பநிலை ஆகும். கடைசியாக கடந்த ஜூன் 2009 வெப்பநிலை மிகவும் அதிகரித்து கானப்பட்டது.

சிம்லா வானிலை மைய இயக்குனர் சுரேந்தர் பால் கூறுகையில், மாநிலத்தில் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாக உள்ளது, மேலும் செவ்வாய்கிழமையும் வெப்பநிலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பல இடங்களில் வெப்பநிலை 40 டிகிரியை தாண்டியது.

உனாவில் அதிகபட்சமாக 44.2 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது, அதைத் தொடர்ந்து சிர்மூரில் உள்ள தௌலகுவானில் 40.7 டிகிரி செல்சியஸ், பிலாஸ்பூரில் உள்ள பார்தினில் 40.4 டிகிரி செல்சியஸ் மற்றும் ஹமிர்பூரில் 40.1 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. சுற்றுலா தலங்களான பாலம்பூர் மற்றும் டல்ஹவுசியில் முறையே 34.5 டிகிரி செல்சியஸ் மற்றும் 28 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

மாநில தலைநகரான சிம்லாவில் அதிகபட்ச வெப்பநிலை 28.4 டிகிரி செல்சியஸ் ஆகவும், நர்கண்டா மற்றும் குஃப்ரியில் முறையே 22.9 டிகிரி செல்சியஸ் மற்றும் 22.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. நாளை மலைப்பகுதிகளில் லேசான மழையும், உயரமான மலைப் பகுதிகளில் மழையும் பனியும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story