அருணாச்சல பிரதேசத்தில் சுரங்க தொழிலாளர்கள் 3 பேர் கடத்தல்


அருணாச்சல பிரதேசத்தில் சுரங்க தொழிலாளர்கள் 3 பேர் கடத்தல்
x

கோப்புப்படம் 

நிலக்கரி சுரங்கத்தில் பணிபுரிந்து வந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த 3 தொழிலாளர்கள் கடத்தப்பட்டுள்ளனர்.

சாங்லாங்,

அருணாச்சல பிரதேச மாநிலம் சாங்லாங் மாவட்டத்தின் பெப்ரு பஸ்தி பகுதியில் நிலக்கரி சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலக்கரி சுரங்கத்தில் அண்டை மாநிலங்களை சேர்ந்த பலர் ஊழியர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில், நிலக்கரி சுரங்கத்தில் பணிபுரிந்து வந்த 3 பேர் கடத்தப்பட்டுள்ளனர். அவர்கள் கியான் தாபா, லேகன் போரா மற்றும் சந்தன் நர்சாரி என்பதும் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து அவர்களை தேடும் பணியில் மாநில போலீஸ் மற்றும் அசாம் ரைபிள்ஸ் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். 3 பேரையும் பயங்கரவாதிகள் கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.


Next Story