நேபாளத்தில் பயங்கர நிலச்சரிவு: 33 பேர் பலி


நேபாளத்தில் பயங்கர நிலச்சரிவு: 33 பேர் பலி
x

Image Courtacy: ANI

நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 33 பேர் பரிதாபமாக பலியாகினர்.

காத்மாண்டு,

நேபாளத்தின் மேற்கு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இடைவிடாமல் கொட்டும் பேய் மழையால் அங்குள்ள பல மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக கர்னாலி மாகாணம் மிகவும் மோசமான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது. அந்த மாகாணத்தின் பல்வேறு நகரங்கள் வெள்ளாக்காடாகி உள்ளன. குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. சாலைகள், பாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

கனமழை மற்றும் வெள்ளத்தை தொடர்ந்து கர்னாலி மாகாணத்தில் பல இடங்களில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்தன. நிலச்சரிவில் சிக்கி இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 22 பேர் மாயமாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை.


Next Story