பயங்கரவாதத்திற்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றாக போராட வேண்டும் எஸ்சிஓ மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு


பயங்கரவாதத்திற்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றாக போராட வேண்டும்    எஸ்சிஓ மாநாட்டில்  பிரதமர் மோடி பேச்சு
x
தினத்தந்தி 4 July 2023 2:15 PM IST (Updated: 4 July 2023 2:19 PM IST)
t-max-icont-min-icon

சில நாடுகள் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தங்கள் கொள்கைகளின் கருவியாகப் வைத்து பயன்படுத்துகின்றன என ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி கூறினார்.

புதுடெல்லி,

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்.சி.ஓ.) கடந்த 2001-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதில், கடந்த 2017-ம் ஆண்டு, இந்தியா, பாகிஸ்தான் சேர்ந்தன. தற்போது, அந்த அமைப்பில் இந்தியா, சீனா, ரஷியா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. சுழற்சி முறையில், தற்போது அதன் தலைவராக இந்தியா உள்ளது.

இந்நிலையில், தலைவர் என்ற முறையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டை இன்று காணொலி காட்சி மூலமாக இந்தியா நடத்துகிறது.

இந்த அமைப்பில் புதிய நிரந்த உறுப்பினராகியுள்ள ஈரானுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிராந்திய பாதுகாப்பு நிலவரம், வர்த்தகம், நாடுகள், போக்குவரத்து தொடர்பை மேலும் வலுப்படுத்துவது, ஆப்கானிஸ்தான் நிலவரம், உக்ரைன் மீதான போர் விவகாரம் எஸ்.சி.ஓ அமைப்பின் உறுப்பு நாடுகள் இடையே ஒத்துழைப்பை விரிவுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பிரதமர் மோடி, மாநாட்டை முன்னின்று நடத்தினார். அப்போது மாநாட்டை தொடங்கி வைத்த பின் பிரதமர் மோடி பேசியதாவது:-

ஈரான் எஸ்சிஓ குடும்பத்தில் புதிய உறுப்பினராக இணைவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். எஸ்சிஓ ஐநா மற்றும் பிற உலகளாவிய நிறுவனங்களுக்குள் சீர்திருத்தங்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க குரலாக மாற முடியும். "இந்தியாவின் ஏஐ அடிப்படையிலான மொழித் தளத்தைப் பகிர்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைவோம். டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

"பயங்கரவாதம் என்பது பிராந்திய மற்றும் உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக உள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றாக போராட வேண்டும். சில நாடுகள் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தங்கள் கொள்கைகளின் கருவியாகப் வைத்து பயன்படுத்துகின்றன மற்றும் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கின்றன. அத்தகைய நாடுகளை கண்டனம் தெரிவிக்க எஸ்சிஓ தயங்கக்கூடாது. எஸ்சிஓ நாடுகள் கண்டிக்க வேண்டும். பயங்கரவாதத்தில் இரட்டை நிலைப்பாடு இருக்கக்கூடாது.

ஆப்கானிஸ்தான் தொடர்பான இந்தியாவின் கவலைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் பெரும்பாலான எஸ்சிஓ உறுப்பு நாடுகளைப் போலவே உள்ளன. ஆப்கானிஸ்தான் மக்களின் நலனுக்காக நாம் ஒன்றுபட்ட முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அண்டை நாடுகளில் அமைதியின்மையை பரப்பவோ அல்லது தீவிரவாத சித்தாந்தங்களை ஊக்குவிக்கவோ ஆப்கானிஸ்தான் நிலம் ஒருபோதும் பயன்படுத்தப்படாமல் இருப்பது முக்கியம் என்றார்.

சீன அதிபர் ஜின்பிங், ரஷிய அதிபர் புதின், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் இதர நாடுகளின் தலைவர்கள் காணொலி காட்சி மூலம் பங்கேற்கிறார்கள். ஐ.நா., ஆசியான் உள்ளிட்ட 6 சர்வதேச, பிராந்திய அமைப்புகளின் தலைவர்களும் இதில் கலந்து கொண்டனர்.


Next Story