பஞ்சாபில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.17 லட்சம் கொள்ளை - மர்ம நபர்களுக்கு வலை


பஞ்சாபில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.17 லட்சம் கொள்ளை - மர்ம நபர்களுக்கு வலை
x

ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.17 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

சண்டிகார்,

பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் மாவட்டத்தின் பாம் கிராமத்தில் ஒரு வங்கி ஏ.டி.எம். உள்ளது. இங்கு நேற்று அதிகாலை 2.40 மணிக்கு புகுந்த கொள்ளையர்கள், ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.17 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றனர். அவர்கள் கியாஸ் கட்டரை பயன்படுத்தி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்துள்ளனர்.

ஏ.டி.எம். மையத்திலும், அருகிலும் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், கொள்ளைக் கும்பல் காரில் தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது. மொத்தம் எத்தனை பேர் இந்த கொள்ளையில் ஈடுபட்டனர் என்று தெரியவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.


Next Story