காட்டு யானை தாக்கி ஆதிவாசி முதியவர் பலி


காட்டு யானை தாக்கி   ஆதிவாசி முதியவர் பலி
x

காட்டு யானை தாக்கி ஆதிவாசி முதியவர் பலியானார்.

மைசூரு: மைசூரு மாவட்டம் டி.நரசிப்புரா அருகே நாகரஒலே வனப்பகுதியை ஒட்டிய ஆனேமலை என்ற ஆதிவாசி குடியிருப்பை சேர்ந்தவர் புட்டப்பா (வயது 75). இவரும், இன்னொருவரும் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளனர். அந்த சமயத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த காட்டு யானை அவர்களை துரத்தியது. இதில் புட்டப்பாவை காட்டு யானை தும்பிக்கையால் பிடித்து தூக்கி வீசியதுடன், தாக்கியது. காட்டு யானையிடம் சிக்காமல் தப்பி இன்னொருவர் கிராம மக்களிடம் தகவல் தெரிவித்தார்.

உடனே கிராம மக்கள் விரைந்து வந்து யானையை விரட்டிவிட்டு, உயிருக்கு போராடிய புட்டப்பாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.


Next Story