உறவினர்களை மதம் மாற்ற முயற்சி; தம்பதி மீது வழக்கு
உறவினர்களை மதம் மாற்ற முயன்ற தம்பதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பெங்களூரு: கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் சன்னப்பட்டணா தாலுகா லம்பானிதாண்டா கிராமத்தில் வசித்து வருபவர் துளசிதாஸ் என்கிற யேசுதாஸ். இவரது மனைவி தேவி என்கிற மேரி.
இவர்கள் 2 பேரும் இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறி இருந்தனர். இந்த நிலையில் லம்பானிதாண்டா கிராமத்தில் வசித்து வரும் உறவினர்கள் சிலரை துளசிதாசும், தேவியும் சேர்ந்து மதம் மாற்றம் செய்ய முயன்றதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் சன்னப்பட்டணா புறநகர் போலீசார் தம்பதி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story