மைனர் பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி; வனக்காவலர் கைது


மைனர் பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி; வனக்காவலர் கைது
x

மைனர் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற வனக்காவலர் கைது செய்யப்பட்டார்.

தார்வார்: தார்வார் மாவட்டம் கல்கட்டகி டவுனை சேர்ந்தவர் லட்சுமணன் சிவப்பா பம்பார்(வயது 25). இவர், கல்கட்டகி வனத்துறையில் வனக்காவலராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் லட்சுமணன் சிவப்பா, அதேப்பகுதியை சேர்ந்த மைனர் பெண்ணை ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். இதையறிந்த மைனர் பெண்ணின் பெற்றோர், சகோதரர் வந்து லட்சுமணன் சிவப்பாவை மடக்கி பிடித்துள்ளனர்.

அப்போது அவர், அவர்களை உருட்டு கட்டையால் தாக்கிவிட்டு தப்பியோடி தலைமறைவாகிவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் கல்கட்டகி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து லட்சுமணனை வலைவீசி தேடிவந்தனர். இந்த நிலையில் லட்சுமணனை, போலீசார் கைது செ்யதனர். கைதான அவர் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story