மனைவியை கொன்ற வழக்கில் ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை


மனைவியை கொன்ற வழக்கில் ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை
x

மனைவியை கொன்ற வழக்கில் ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு:

பெங்களூரு கெம்பேகவுடா நகர் சன்யாசிபாளையாவை சேர்ந்தவர் சென்னகவுடா (வயது 44). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி மஞ்சுளா. இந்த தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 14-ந்தேதி குடும்ப தகராறில் மஞ்சுளா முகத்தில் சென்னகவுடா திராவகம் வீசினார். இதில் பலத்த காயமடைந்த அவர், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சென்னகவுடாவை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு பெங்களூரு சிட்டி சிவில் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து கடந்த 27-ந் தேதி நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அப்போது சென்னகவுடா மீதான குற்றச்சாட்டு ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story