பைக் டாக்சிக்கு தடை விதிக்க வலியுறுத்தி ஆட்டோ டிரைவர்கள் நாளை வேலை நிறுத்தம்


பைக் டாக்சிக்கு தடை விதிக்க வலியுறுத்தி ஆட்டோ டிரைவர்கள் நாளை வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 19 March 2023 12:15 AM IST (Updated: 19 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பைக் டாக்சிக்கு தடை விதிக்க வலியுறுத்தி ஆட்டோ டிரைவர்கள் நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள்.

பெங்களூரு:

பெங்களூருவில் பைக் டாக்சிகளுக்கு அனுமதி வழங்கி போக்குவரத்து துறை கடந்த சில மாதங்களுக்கு முன்பு உத்தரவிட்டு இருந்தது. இதற்கு ஆட்டோ டிரைவர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பைக் டாக்சியால் தங்களது வருமானம் பாதிக்கப்படுவதால், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று ஆட்டோ டிரைவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில், பைக் டாக்சிகளுக்கு தடைவிதிக்க வலியுறுத்தி கர்நாடக அரசுக்கு ஆட்டோ டிரைவர்கள் சங்கம் 3 நாட்கள் கெடு விதித்துள்ளது. இந்த நிலையில், பெங்களூருவில் ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் மற்றும் கூட்டமைப்பு சார்பில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அப்போது பைக் டாக்சிக்கு தடை விதிக்காவிட்டால், வருகிற 20-ந் தேதி (நாளை) போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது இன்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு 12 மணி முதல் நாளை (திங்கட்கிழமை) நள்ளிரவு 12 மணிவரை 24 மணிநேரம் ஆட்டோக்கள் ஓடாது என்று ஆட்டோ சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மஞ்சுநாத் தெரிவித்துள்ளார். இதற்கு 21 சங்கங்கள் ஆதரவு தெரிவித்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.


Next Story