திருப்பதி மாநகராட்சிக்கு விருது - ஜனாதிபதி வழங்கினார்


திருப்பதி மாநகராட்சிக்கு விருது - ஜனாதிபதி வழங்கினார்
x

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் திருப்பதி மாநகராட்சி ஒன்று முதல் பத்து வரையிலான விருதுகளின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

திருப்பதி:

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நகரங்கள் வரிசைப்படுத்தப்பட்டன. அதில் திருப்பதி மாநகராட்சி ஒன்று முதல் பத்து வரையிலான விருதுகளின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. அதற்காக திருப்பதி மாநகராட்சிக்கு 'சபை மித்ரா சுரக்ஷா சாஹர்' என்ற உயரிய விருது கிடைத்துள்ளது. அந்த விருது வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் நடந்தது. நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்று வழங்க, அதை ஆந்திர மாநில நகராட்சித்துறை மந்திரி ஆதிமூலம் சுரேஷ் பெற்றுக் கொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் ஆந்திர மாநில நகராட்சித்துறை முதன்மைச் செயலர் ஸ்ரீலட்சுமி, திருப்பதி எம்.எல்.ஏ. பூமண.கருணாகர்ரெட்டி, திருப்பதி மாநகராட்சி மேயர் டாக்டர் திாிஷா, கமிஷனர் அனுபமா அஞ்சலி ஆகியோர் பங்கேற்றனர்.

மேற்கண்ட தகவலை திருப்பதிமாநகராட்சி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டள்ளது.


Related Tags :
Next Story