போலீசாரின் கண்காணிப்பு வளையத்தில் அயோத்தி


தினத்தந்தி 22 Jan 2024 1:26 AM GMT (Updated: 22 Jan 2024 1:39 AM GMT)

பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் அயோத்தியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அயோத்தி,

ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, அயோத்தியில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அயோத்தி மாவட்டம் முழுவதும் 10 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சில கேமராக்களில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. விழா நடக்கும் பகுதியில், சாதாரண உடை அணிந்த போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். பல மொழிகள் அறிந்த போலீசாரின் சேவை பயன்படுத்தப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் அயோத்தியில் ரோந்து சுற்றி வருகிறார்கள். முக்கிய பிரமுகர்கள் வருகையின்போது கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்காக நடமாடும் தடுப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.

சரயு ஆற்று பகுதியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச, மாநில எல்லை பகுதிகளில் பலத்த சோதனை நடந்து வருகிறது. கூட்டத்தை கட்டுப்படுத்த டிரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன.

மாநில காவல் துறையுடன், விரைவு அதிரடிப் படை (RAF), தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) போன்ற மத்தியப் படைகளும் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.


Next Story