கரும்பு தோட்டத்தில் பச்சிளம் ஆண் குழந்தை மீட்பு தாய்க்கு வலைவீச்சு


கரும்பு தோட்டத்தில் பச்சிளம் ஆண் குழந்தை மீட்பு  தாய்க்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 4 Oct 2023 6:45 PM GMT (Updated: 4 Oct 2023 6:45 PM GMT)

உப்பள்ளியில் பிறந்த சில மணி நேரத்திலேயே ஆண் குழந்தையை கரும்பு தோட்டத்தில் வீசிவிட்டு சென்ற கல்நெஞ்சம் கொண்ட தாயை போலீசார் தேடி வருகின்றனர்.

உப்பள்ளி-

உப்பள்ளியில் பிறந்த சில மணி நேரத்திலேயே ஆண் குழந்தையை கரும்பு தோட்டத்தில் வீசிவிட்டு சென்ற கல்நெஞ்சம் கொண்ட தாயை போலீசார் தேடி வருகின்றனர்.

கரும்பு தோட்டத்தில் ஆண் குழந்தை மீட்பு

தார்வார் மாவட்டம் உப்பள்ளியை அடுத்த கல்கட்டகி கிராமத்தில் கரும்பு தோட்டம் ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் காலை இந்த கரும்பு தோட்டத்தில் குழந்தை அழும் சத்தம் கேட்டது. இதை கரும்பு தோட்டத்தின் அருகே வேலை பார்த்த வந்த பெண் ஒருவர் கேட்டுள்ளார். சத்தம் வந்த திசையை நோக்கி சென்றார். அப்போது அங்கிருந்து கரும்பு தோட்டத்திற்குள் பிறந்த சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை கிடந்தது. அந்த குழந்தையை சுற்றி எறும்புகள் ஊர்ந்து கொண்டிருந்தது.

அதில் சில எறும்புகள் குழந்தையை கடித்து கொண்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண் உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை மீட்டு தனது வீட்டிற்கு கொண்டு சென்றார். அங்கு குழந்தைக்கு அவர் பால் கொடுத்தார். இதையடுத்து கல்கடகி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.

கல்நெஞ்சம் படைத்த தாய்க்கு வலைவீச்சு

விசாரணையில், கரும்பு தோட்டத்திலேயே குழந்தையை பெற்றெடுத்திருப்பது தெரியவந்தது. இதற்கான ரத்த அடையாளங்கள் கரும்பு தோட்டத்தில் இருந்தது தெரியவந்தது. பிறந்த சில மணி நேரத்திலேயே வீசி சென்றிருப்பதால், கள்ளத்தொடர்பில் பிறந்ததா? அல்லது குடும்ப தகராறில் குழந்தை கரும்பு தோட்டத்தில் வீசிவிட்டு சென்றரா? என்பது தெரியவில்லை.

இதையடுத்து அந்த குழந்தையை மீட்ட போலீசார் தாலுகா அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சிகிக்சை முடிந்ததும் குழந்தையை அந்த பகுதியில் உள்ள காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கிருக்கும் ஊழியர்கள் குழந்தையை பராமரித்து வருகின்றனர். இதற்கிடையில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கல்கடகி போலீசார் கல்நெஞ்சம் ெகாண்ட தாயை தேடி வருகின்றனர்.


Next Story