அக்னி வீரர்களுக்கு இளங்கலை பட்டம் மத்திய கல்வி அமைச்சகம் தகவல்


அக்னி வீரர்களுக்கு இளங்கலை பட்டம் மத்திய கல்வி அமைச்சகம் தகவல்
x

நாட்டின் ஆயுதப்படைகளில் இளைஞர்களை 4 ஆண்டு பணிக்காலம் கொண்ட அக்னி வீரர்களாக சேர்ப்பதற்கு ‘அக்னிபாத் யோஜனா’ என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

நாட்டின் ஆயுதப்படைகளில் இளைஞர்களை 4 ஆண்டு பணிக்காலம் கொண்ட அக்னி வீரர்களாக சேர்ப்பதற்கு 'அக்னிபாத் யோஜனா' என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த திட்டத்தில் அக்னிவீரர்களாக சேருவோரின் எதிர்கால நலன்களை கருத்தில் கொண்டு 3 ஆண்டு சிறப்பு பட்டப்படிப்பை மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. 3 ஆண்டு கால செயல்திறன்கள் அடிப்படையில் 50 சதவீத மதிப்பெண்கள் கணக்கிடப்படும். மீதி 50 சதவீத மதிப்பெண்கள் மொழிகள், பொருளாதாரம், வரலாறு, அரசியல் அறிவியல், பொது நிர்வாகம், சமூகவியல், கணிதம், கல்வி, வணிகவியல், சுற்றுலா, விவசாயம் உள்ளிட்ட பாடங்களில் இருந்து கணக்கிடப்படும். எனவே 4 ஆண்டு பணிக்காலம் முடிந்து அக்னி வீரர்கள் வெளியேறுகிறபோது பட்டதாரிகளாக வெளியே வரவும் வாய்ப்பு உருவாகி உள்ளது. இந்த பட்டத்தை இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் வழங்கும்.


Next Story