சுகேஷ் சந்திரசேகருக்கு ஜாமீன்- டெல்லி கோர்ட்டு உத்தரவு


சுகேஷ் சந்திரசேகருக்கு ஜாமீன்- டெல்லி கோர்ட்டு உத்தரவு
x

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகருக்கு டெல்லி கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.

புதுடெல்லி,

ஜெயலலிதா மறைவைத்தொடர்ந்து அ.தி.மு.க. பிளவு பட்டபோது, சசிகலா தலைமையிலான அணிக்கு கட்சியின் சின்னத்தை மீட்க, இந்திய தேர்தல் கமிஷன் அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக கூறி, டி.டி.வி.தினகரன், இடைத்தரகராக செயல்பட்ட சுகேஷ் சந்திரசேகர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திரசேகரிடம் இருந்து ரூ.1.3 கோடி மற்றும் சொகுசு கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் அவர் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி டெல்லி சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே விசாரித்தார். நேற்று இந்த வழக்கில் சுகேஷ் சந்திர சேகருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். திகார் சிறையில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகர் மீது மேலும் பல வழக்குகள் உள்ளதால், லஞ்சம் கொடுத்த வழக்கில் ஜாமீன் கிடைத்தாலும் அவரால் வெளியே வரமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story