எஸ்.ஐ. தேர்வு முறைகேடு வழக்கில் கைதான துணை சூப்பிரண்டு உள்பட 5 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி


எஸ்.ஐ. தேர்வு முறைகேடு வழக்கில் கைதான  துணை சூப்பிரண்டு உள்பட 5 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி
x

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் கைதான துணை போலீஸ் சூப்பிரண்டு உள்பட 5 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கர்நாடக ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரு: சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் கைதான துணை போலீஸ் சூப்பிரண்டு உள்பட 5 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கர்நாடக ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.

துணை போலீஸ் சூப்பிரண்டு

கர்நாடகத்தில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு குறித்து சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் பா.ஜனதா பெண் பிரமுகர், துணை போலீஸ் சூப்பிரண்டான மல்லிகார்ஜுன் சாலி உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், மல்லிகார்ஜுன் சாலி, சகாபாத் நகரசபை அதிகாரி ஜோதி பட்டீல், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், தனியார் பள்ளி ஆசிரியர் அர்ச்சனா மற்றும் சுனிதா ஆகிய 5 பேரும் கலபுரகி கோர்ட்டில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த ஜாமீன் மனு மீதான விசாரணை நீதிபதி பசவராஜ் நேசரகி முன்னிலையில் நடைபெற்று வந்தது.

ஜாமீன் மனு தள்ளுபடி

அப்போது ஜாமீன் மனு மீதான விசாரணை நிறைவு பெற்றதை தொடர்ந்து நீதிபதி பசவராஜ் நேசரகி தீர்ப்பு கூறினார். அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு மல்லிகார்ஜுன சாலி உள்பட 5 பேரின் ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.

இதற்கிடையில், இவ்வழக்கு தொடர்பாக மைசூரு மாவட்டத்தை சேர்ந்த மது என்பவரை சி.ஐ.டி. போலீசார் கைது செய்துள்ளனர். கர்நாடக ஆயுதப்படை போலீசில் இன்ஸ்பெக்டராக அவர் பணியாற்றுகிறார். ஏற்கனவே கைதான சிலர் கொடுத்த தகவலின் பேரில் மதுவுக்கு, இவ்வழக்கில் தொடர்பு இருப்பதால், அவர் கைது செய்யப்பட்டு இருப்பது தொியவந்துள்ளது. அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story