பஜ்ரங்தள், பி.எப்.ஐ. அமைப்புகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை


பஜ்ரங்தள், பி.எப்.ஐ. அமைப்புகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை
x

பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டால் பஜ்ரங்தள், பி.எப்.ஐ. அமைப்புகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மந்திரி பிரியங்க் கார்கே தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:-

டெல்லியில் நேற்று மந்திரி பிரியங்க் கார்கே நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

கடுமையான நடவடிக்கை

கர்நாடகத்தில் அமைதியை கெடுக்கும் விதமாக எந்த அமைப்பு நடந்து கொண்டாலும், அவர்கள் மீது பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கப்படும். சட்டம்-ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படும் விதமாகவும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டாலும் பஜ்ரங்தள், பி.எப்.ஐ. அமைப்புகள் நடந்து கொண்டால், சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.அந்த அமைப்புகளுக்கு தடை விதிப்பது குறித்தும் பரிசீலனை நடத்தி முடிவு செய்வோம். மாநிலத்தில் அமைதி நிலவ வேண்டும். மக்களிடையே பிளவை ஏற்படுத்தி மோதல்களை உருவாக்கும் எந்த அமைப்பாக இருந்தாலும், அந்த அமைப்புகள் மீது எந்த விதமான பாரபட்சமும் இன்றி நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் அரசு தயாராக உள்ளது.

மக்கள் எதிர்பார்ப்புபடி ஆட்சி

இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் அமைப்புகளை பார்த்து காங்கிரஸ் அரசு கைகட்டி வேடிக்கை பார்க்காது. சம்பந்தப்பட்ட அமைப்புகள் மீது நடவடிக்கை எடுப்பதில் இருந்து காங்கிரஸ் ஒரு போதும் பின்வாங்காது. இந்த விவகாரங்களில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது. மக்கள் மாற்றத்தை விரும்பி காங்கிரசுக்கு ஆதரவு அளித்துள்ளனர். மக்களின் எதிர்பார்ப்புபடி ஆட்சி நடத்த வேண்டியது காங்கிரஸ் அரசின் கடமையாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நேற்று முன்தினம் பா.ஜனதா ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ஹிஜாப், பசுவதை தடுப்பு சட்டம், மதமாற்று தடை சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்களுக்கு தடை விதிப்பது குறித்து பரிசீலனை நடத்தப்படும் என்று பிரியங்க் கார்கே கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story