2024-ம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார், யுவ புரஸ்கார் விருதுகள் அறிவிப்பு


2024-ம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார், யுவ புரஸ்கார் விருதுகள் அறிவிப்பு
x
Image Courtesy : PTI

2024-ம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார், யுவ புரஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

புதுடெல்லி,

2024-ம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார் மற்றும் யுவ புரஸ்கார் விருதுகளைப் பெறும் பல்வேறு மொழிகளைச் சேர்ந்த எழுத்தாளர்களின் பெயர்களை சாகித்ய அகாடமி அறிவித்துள்ளது. இதன்படி ஆங்கில எழுத்தாளர் கே.வைஷாலி, இந்தி எழுத்தாளர் கவுரவ் பாண்டே உள்ளிட்ட 23 பேருக்கு யுவ புரஸ்கார் விருதுகள் வழங்கப்பட உள்ளன.

இதில் அசாமிய மொழி, மராத்தி, வங்காள மொழி, மைதிலி, பஞ்சாபி, மணிபூரி, ஒடியா, நேபாளி, ராஜஸ்தானி, காஷ்மீரி, கன்னடம், கொங்கனி, தெலுங்கு, சிந்தி, சந்தாலி, மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளைச் சேர்ந்த எழுத்தாளர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ் எழுத்தாளர் லோகேஷ் ரகுராமன் தனது 'விஷ்ணு வந்தார்' சிறுகதைத் தொகுப்பிற்காக யுவ புரஸ்கார் விருது வென்றுள்ளார்.

இதே போல் பல்வேறு மொழிகளைச் சேர்ந்த 24 எழுத்தாளர்களுக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 7 நாவல்கள், 6 கவிதை தொகுப்புகள், 4 கதைகள், 5 சிறுகதைகள், ஒரு நாடகம் மற்றும் ஒரு வரலாற்று புனைவு ஆகியவை பால சாகித்ய புரஸ்கார் விருதுகளை வென்றுள்ளன. தமிழ் எழுத்தாளர் யூமா வாசுகி தனது 'தன்வியின் பிறந்தநாள்' என்ற கதை தொகுப்பிற்காக பால சாகித்ய புரஸ்கார் விருதை வென்றுள்ளார்.


Next Story