அக்னிபாத் திட்டம் குறித்து பொய்யான தகவல் பரப்பிய 35 வாட்ஸ்அப் குழுக்களுக்கு தடை


அக்னிபாத் திட்டம் குறித்து பொய்யான தகவல் பரப்பிய 35 வாட்ஸ்அப் குழுக்களுக்கு தடை
x
தினத்தந்தி 19 Jun 2022 11:39 PM IST (Updated: 19 Jun 2022 11:39 PM IST)
t-max-icont-min-icon

35 வாட்ஸ்அப் குழுக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

புதுடெல்லி,

ராணுவத்துக்கு ஆள் சேர்க்க 'அக்னிபத்' என்ற புதிய திட்டத்தை கடந்த 14-ந் தேதி மத்திய அரசு அறிவித்தது. 4 ஆண்டுகளுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்து வருகின்றன

இந்த நிலையில் அக்னிபத் திட்டம் குறித்து பொய்யான தகவல் பரப்பியதற்காக 35 வாட்ஸ்அப் குழுக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

1 More update

Next Story