வீரப்பன் வரலாறு குறித்த புத்தகத்திற்கு தடை


வீரப்பன் வரலாறு குறித்த புத்தகத்திற்கு தடை
x

சிவசுப்பிரமணியன் என்பவர் வீரப்பன் வரலாறு குறித்து எழுதிய புத்தகத்தை வெளியிட பெங்களூரு முதன்மை அமர்வு கோர்ட்டு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

பெங்களூரு,

சிவசுப்பிரமணியன் என்பவர் வீரப்பன் வரலாறு குறித்து ஆங்கிலத்தில் எழுதிய புத்தகத்தை வெளியிட பெங்களூரு முதன்மை அமர்வு கோர்ட்டு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. பெங்களூருவில் உள்ள பத்திரிகையாளர் சங்கத்தில் நாளை சிவசுப்பிரமணியன் என்பவர் வீரப்பன் குறித்து ஆங்கிலத்தில் எழுதிய புத்தகத்தை வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தாக்கல் செய்யப்பட்ட மனு மீது வக்கீல் நடேசன் வாதிட்டார். இந்த புத்தக வெளியீட்டுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்றும் வாதிட்டார். வக்கீலின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி சீனிவாசன் வீரப்பன் குறித்து ஆங்கிலத்தில் எழுதிய புத்தகத்தை வெளியிட தற்காலிக தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.


Next Story