வங்காள தேச விவகாரம் - பிரதமர் மோடி ஆலோசனை


வங்காள தேச விவகாரம் - பிரதமர் மோடி ஆலோசனை
x

வங்காள தேச அரசியல் விவகாரம் குறித்து பிரதமர் இல்லத்தில் பாதுகாப்புக்கான கேபினட் கமிட்டி கூடி ஆலோசனை நடத்தியது.

புதுடெல்லி,

கலவரம் காரணமாக வங்காள தேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள நிலையில் வங்காள தேச விவகாரம் குறித்து பிரதமர் மோடி தலைமையில் அவரது இல்லத்தில் மூத்த மந்திரிகள் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை கூட்டத்தில் மூத்த மத்திய மந்திரிகள், பாதுகாப்புத்துறை, வெளியுறவுத்துறை, நிதித்துறை மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். ஹிண்டனில் ஷேக் ஹசீனாவை சந்தித்தது குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரதமரிடம் விளக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story