சாளுமரத திம்மக்காவிடம் உரிமை பத்திரத்தை வழங்கிய பசவராஜ் பொம்மை


சாளுமரத திம்மக்காவிடம் உரிமை பத்திரத்தை வழங்கிய பசவராஜ் பொம்மை
x

பி.டி.ஏ. சார்பில் வழங்கப்பட்ட வீட்டு மனைக்கான பத்திரத்தை சாளுமரத திம்மக்காவிடம் பசவராஜ் பொம்மை வழங்கினார்.

பெங்களூரு:

துமகூரு மாவட்டம் குப்பியை சேர்ந்தவர் சாளுமரத திம்மக்கா. இவர், தனது சொந்த ஊரில் சாலையின் இருபுறங்களிலும் மரங்களை வளர்த்து சுற்றுச்சூழல் ஆர்வலராக விளங்கி வருகிறார். தற்போது பெங்களூருவில் வசித்து வரும் சாளுமரத திம்மக்காவுக்கு, பெங்களூரு கெம்பேகவுடா லே-அவுட்டில் பி.டி.ஏ.(பெங்களூரு வளர்ச்சி ஆணையம்) சார்பில் 4 ஆயிரம் சதுரஅடி கொண்ட வீட்டுமனையை ஒதுக்கி இருந்தது. முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் உத்தரவின் பேரில் அவருக்கு வீட்டுமனை ஒதுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், பெங்களூரு ரேஸ் கோர்ஸ் ரோட்டில் உள்ள முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் வீட்டுக்கு நேற்று காலையில் சாளுமரத திம்மக்கா அழைத்து வரப்பட்டார்.

அங்கு அவர், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை சந்தித்து பேசினார். பின்னர் கெம்பேகவுடா லே-அவுட்டில் பி.டி.ஏ. சார்பில் ஒதுக்கப்பட்ட வீட்டுமனைக்கான உரிமை பத்திரத்தை சாளுமரத திம்மக்காவிடம், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வழங்கினார். இதையடுத்து, தனக்கு வீட்டுமனை வழங்கிய பசவராஜ் பொம்மைக்கு, சாளுமரத திம்மக்கா நன்றி தெரிவித்தார்.


Next Story