பிபிசி பஞ்சாபி டுவிட்டர் கணக்கு முடக்கம்!


பிபிசி பஞ்சாபி டுவிட்டர் கணக்கு முடக்கம்!
x

காலிஸ்தானி அனுதாபி அம்ரித்பால் சிங்கை போலீசார் தேடி வருகின்றனர்.

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலத்தில் பிரிவினைவாத தலைவராக உருவெடுத்து இருக்கும் அம்ரித்பால் சிங்குக்கும், அவரது 'வாரிஸ் பஞ்சாப் டி' என்ற அமைப்புக்கும் எதிராக பஞ்சாப் போலீசார் கடந்த 18-ந்தேதி அதிரடி நடவடிக்கையை தொடங்கினர்.

ஜலந்தரில், போலீசாரின் முற்றுகையில் இருந்து அம்ரித்பால் சிங் தப்பினார். அவரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வரும் நிலையில், அவர் அண்டை நாடான நேபாளத்துக்கு தப்பி சென்றிருப்பதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அவரை கைது செய்யுமாறு நேபாள அரசுக்கு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்து உள்ளது.

இந்த நிலையில், சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று பிபிசி பஞ்சாபி செய்தி நிறுவனத்தின் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளதாக டுவிட்டர் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இருப்பினும், "சட்ட கோரிக்கை" பற்றிய விவரங்கள் எதுவும் இல்லை.

அம்ரித்பால் சிங்கை போலீசார் தேடி வரும் நிலையில் பஞ்சாப்பை சேர்ந்த பத்திரிகையாளர்கள், செய்தி நிறுவனங்களின் டுவிட்டர் கணக்குகளை சில நாட்களாக பஞ்சாப் அரசு முடக்கி வருகிறது. இதுவரை எத்தனை டுவிட்டர் கணக்குகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

1 More update

Next Story