கடற்கரை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி.. கடற்கரையில் குப்பைகளை அகற்றிய புதுவை துணைநிலை கவர்னர் தமிழிசை


கடற்கரை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி.. கடற்கரையில் குப்பைகளை அகற்றிய புதுவை துணைநிலை கவர்னர் தமிழிசை
x

புதுச்சேரி கடற்கரையில் நடைபெற்ற கடற்கரை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சியை குப்பைகளை அகற்றி துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடக்கி வைத்தார்.

புதுச்சேரி,

புதுச்சேரி கடற்கரையில் நடைபெற்ற கடற்கரை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சியை குப்பைகளை அகற்றி துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார்.

ஜி-20 இந்திய தலைமை அலுவலகம் சார்பில் மாபெரும் கடற்கரை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி இன்று இந்தியா மற்றும் ஜி 20 நாடுகளில் நடத்தப்படுகிறது. புதுச்சேரி அரசின் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை சார்பில் கடற்கரை தூய்மைப்படுத்தும் பணி இன்று நடைபெற்றது.

தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் சட்டப்பேரவைத் தலைவர் ஏம்பலம் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு குப்பைகளை அகற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து மாணவ மாணவிகள் யோகா செய்த நிலையில், அதைக் கண்டுகளித்த தமிழிசை சவுந்தரராஜன் வெகுவாகப் பாராட்டினார்.


Next Story