மைசூருவை சேர்ந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி


மைசூருவை சேர்ந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
x

மைசூருவை சேர்ந்த 2 பேர் கடலில் மூழ்கி பலியானார்கள்

பெங்களூரு: கர்நாடக மாநிலம் மைசூரு டவுனை சேர்ந்தவர்கள் திவாகர் (வயது 45), நிங்கப்பா (60). இவர்கள் நண்பர்கள் சிலருடன் கடந்த 27-ந்தேதி தட்சிணகன்னடா மாவட்டம் மங்களூருவுக்கு வேலை விஷயமாக வந்திருந்தனர். இன்று காலை 7.30 மணி அளவில் அவர்கள் மங்களூரு பனம்பூர் கடற்கரையில் அரபிக்கடலில் குளித்துள்ளனர்.

அப்போது ராட்சத அலையில் சிக்கி திவாகர், நிங்கப்பா ஆகியோர் கடலில் மூழ்கி பலியானார்கள். இதுகுறித்த புகாரின் பேரில் பனம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Next Story