மே.வங்காளத்தில் தொடரும் பதற்றம்: வாக்கு எண்ணும் மையத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சு: போலீஸ் உள்பட 3 பேர் பலி


மே.வங்காளத்தில் தொடரும் பதற்றம்: வாக்கு எண்ணும் மையத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சு: போலீஸ் உள்பட 3 பேர் பலி
x

வாக்கு எண்ணும் மையத்தில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட நிலையில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

கொல்கத்தா,

மேற்குவங்காளத்தில் பஞ்சாயத்து தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் பல இடங்களில் வன்முறை வெடித்தது. வன்முறையில் பலர் உயிரிழந்தனர்.

இதனிடையே, பஞ்சாயத்து தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. அதில் பெரும்பாலான இடங்களை கைப்பற்றிய திரிணாமுல் காங்கிரஸ் அபார வெற்றிபெற்றது.

அதேவேளை, வாக்கு எண்ணிக்கையின் போதும் பல்வேறு பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறியது. அந்த வகையில் நேற்று இரவு தெற்கு பர்கானஸ் மாவட்டம் பங்ஹொரி பகுதியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுகொண்டிருந்தபோது வாக்கு எண்ணும் மையத்தில் இந்திய மதச்சார்பற்ற முன்னணி (ஐஎஸ்எப்) கட்சியினர் திடீர் தாக்குதல் நடத்தினர்.

அந்த கட்சியினர் வாக்கு எண்ணும் மையம் மீது நாட்டு வெடிகுண்டு வீசினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீசார் அங்கு ரப்பர் குண்டு உடைய துப்பாக்கியால் தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ராஜூ மொஹால் என்ற போலீஸ் அதிகாரி உயிரிழந்தார். மேலும், ஐஎஸ்எப் கட்சி தொண்டர்கள் ஹரசன் மொஹால், ரசுல் ஆகிய 2 பேர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.


Next Story